மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர். மலையாளம் ‘திரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்தார். இந்த படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமலின் இளைய மகளாக எஸ்தர் நடித்தார். தெலுங்கில் ரீமேக் ஆன திரிஷ்யத்திலும் வெங்கடேஷ் மகளாக நடித்தார்.
எஸ்தர் தற்போது 10-வது வகுப்பு முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில், தமிழ் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். படத்தின் பெயர் ‘குழலி’. அறிமுக இயக்குனர் சேர கலையரசன் இதை இயக்குகிறார். இதில் குழலியாக நடிக்கும் எஸ்தருக்கு கிராமத்து பெண் வேடம். படத்திலும் 10-வது வகுப்பு மாணவியாகவே நடிக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.