அதர்வாவுடன் இணைந்த அட்டு நடிகர்

அண்மையில் வெளிவந்துள்ள படம் ‘அட்டு’. இது வடசென்னை குப்பைமேட்டு பின்னணி கதை.

இந்த படத்தில் நாயகனின் நண்பனாக நடித்திருப்பவர் நடிகர் பிரபாகர்.

படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறிய அவர்…

“சினிமா ஆர்வம் என்னைப் பாடாய் படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கூட நடித்து இருக்கிறேன். அது மறக்க முடியாத அனுபவம் என்றாலும், தமிழில் நல்ல வாய்ப்புக்காகவே நீண்ட நாள் காத்து இருந்தேன்.

அப்படி ஒரு திருப்புமுனை வாய்ப்பாக வந்த படம் தான் ‘அட்டு’. கதையை இயக்குனர் ரத்தன் லிங்கா சொன்ன போதே அந்த அழுக்கு மனிதர்களின் வாழ்க்கையும் சூழலும் செயல்களும் எனக்குப் பிடித்து விட்டது.

படமாக்கும் போதுதான் மிகவும் சிரமப்பட்டோம். கொடுங்கையூர் குப்பை மேட்டில்தான் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்தது. இங்கு ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கும். இன்னோரிடத்தில் வி‌ஷ வாயு மேலே வந்து கொண்டிருக்கும்.

எனக்கு 8 ஆண்டு காலப் போராட்டம். இந்த படம் 3 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டது. படம் பார்த்து பலரும் பாராட்டும் போது எல்லா கஷ்டங்களும் காணாமல் போய்விடுகின்றன. தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சார் என்னைப்பற்றி பாராட்டியதை மறக்க முடியாது.

‘அட்டு’வுக்குப் பின்அதர்வாவின் ‘ஒத்தைக்கு ஒத்தை’ படத்தில் நடிக்கிறேன். அதில் பாசிட்டிவ் ரோல்” என்றார்.