பொதுவாக ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளது என்பதும், ராகு கேது திசையினால் துன்பம் வருகிறது என்பதும் வேறு வேறு நிகழ்வுகள் ஆகும். ஒரு ஜாதகத்தில் தோஷம் நீக்குவதற்கு திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி சென்று வழிபாடு செய்வது வழக்கம் ஆகும்.
ராகு கேது திசையில் வரும் தோஷங்கள் கஷ்டங்கள் நீங்க அல்லது விலக கருடன் ஜெபம் மற்றும் வழிபாடு செய்ய வேண்டும். சர்ப்ப திசையானது பாதிப்புகளை செய்யுமானால் விபத்து, மரண பயம், புத்தி பேதலிப்பு, சர்ம வியாதிகள், ஆறாத புண்கள், கட்டிகள், கோர்ட், கேஸ் வழக்குகள் போன்றவை ஏற்படும்.
கருடன் காயத்ரி மந்திரம் :
ஓம் பகூ ராஜாய வித்மஹே
ஸுபர்ண பகூய தீமஹி
தன்னோ கருடப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை 11 தடவை உச்சரிக்கவும்.
கருடன் மூலமந்திரம் :
ஒம் ஈம் ஓம் நமோ பகவதே மஹா கருடாய
பகூராஜாய விஷ;ணு வல்லபாய த்ரைலோக்ய பரிபூஜிதா
உக்ர பயங்கர காலாநலரூபாய வஜ்ர நகாய வஜரதுண்டாய
வஜ்ர தந்தர்ய வஜரதம்ஷ;ட்ராய வஜ்ரபுச்சாய ஸகல
நாகதோஷ ரகூயாய ஸர்வ விஷம் நாசய நாசய ஹந
ஹந தஹ தஹ பச பச பஸ்மீ குரு பஸ்மீ குரு
ஹீம்பட் சுவாஹா.
இந்த மந்திரத்தை 54 தடவை உச்சரிக்கவும்.
1. காலையில் கிழக்கு முகமாகவும் மாலையில் மேற்கு முகமாகவும் ஜெபம் செய்ய வேண்டும்.
2. வெண்பட்டு தர்ப்பைபாய் பலா பலகையில் அமர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்.
3. விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திரம் சித்தி பெறும் காலம் வரையில் தலையில் நல்லெண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் பலன் கொடுக்கும்.