மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஜான் பட்டோ பிரான்கோ என்பவர் உலகின் குண்டு மனிதராக இருந்து வருகிறார். அவர் மொத்தம் 595 கிலோ இருக்கிறார்.
இவ்வளவு எடையுடன் இருப்பதால் அவரால் நடமாட முடியவில்லை. எனவே ஆபரேஷன் செய்து அவரது உடல் எடையை குறைப்பதற்கு டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக குடாலாஜாரா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் நடந்தது.
இரைப்பையில் சில பகுதிகளை வெட்டி எடுத்து ஆபரேஷன் செய்துள்ளனர். மேலும் பல ஆபரேஷன்கள் செய்ய உள்ளனர்.
இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, தற்போது முதல்கட்டமாக இரைப்பை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக அமைந்துள்ளதா? என்பது போக போகத்தான் தெரியும். அவரது உடல் இந்த ஆபரேஷனை ஏற்றுக்கொண்டால் அடுத்து பல கட்ட ஆபரேஷன்கள் செய்ய இருக்கிறோம். அவரது உடல் எடையை பாதியாக குறைப்பது தான் எங்கள் திட்டம். ஆபரேஷன் மூலம் இதை செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்று கூறினார்கள்.