ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக இருந்த நாடு உக்ரைன். 1991-ம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தனி குடியரசாக மாறியது.
உக்ரைன் நாடு ஐரோப்பிய யூனியனுக்கும், ரஷ்யாவுக்கு இடையில் உள்ள நாடு ஆகும். இதனால் இந்த இரண்டு தரப்பில் இருந்தும் உக்ரைனுக்கு அரசியல் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே, உக்ரைனை சேர்ந்த கிரிமியா பகுதி பொதுவாக்கெடுப்பு மூலம் ரஷ்யா உடன் சேர்ந்தது. பலத்த போராட்டங்களுக்கு பிறகு இது நடைபெற்று வந்தது. இதனால் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா உடன் சர்ச்சை போக்கு நிலவி வருகின்றது. இதனை ஐரோப்பிய யூனியன் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைன் நாட்டிற்கு செல்ல இலவச விசா வழங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ வரவேற்பு தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை உக்ரைன் நாட்டை ஐரோப்பியன் யூனியன் மயமாக்கும் முயற்சி என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.