திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறாரா குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி?

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 23 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். அப்போது திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனை அவருடைய 94வது பிறந்தநாளுடன் சேர்த்து வைர விழாவாக கொண்டாட அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் 23ஆம் தேதி உதகையில் நடைபெறும் பள்ளி ஒன்றின் ஆண்டுவிழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி பங்கேற்கவுள்ளார். இதற்காக வரும் 23ஆம்தேதி காலை அவர் சிறப்பு விமானம் மூலம் கோவை வருகிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலம் உதகைக்கு செல்கிறார். அங்கு பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

பின்னர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு செல்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. இதைத்தொடர்ந்து சென்னை வரும் அவர் 24ஆம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்ல உள்ளார்.

இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரான திமுக தலைவர் கருணாநிதியை அவர் சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது நலம்பெற்று வருகிறார்.

இந்நிலையில் தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.