எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைய விரும்பவில்லை என்றும் தனித்தே செயல்பட விருப்புவதாகவும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும்இ எம்.எல்.ஏவுமான செம்மலை கூறியுள்ளார்.
ஆளும் கட்சியான அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. இதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் இரு அணிகளும் இணைய தீவிர முயற்சிகள் நடந்தன.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடுவே பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்கள் பல கடந்தும் கூட, பேச்சுவார்த்தை நடப்பதாக தெரியவில்லை.
சசிகாலா குடும்பத்தினரை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம் என ஓபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்நிலையில் சேலத்தில் அதிமுக அம்மா அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய செம்மலை, எடப்பாடி பழனிச்சாமி அணிக்குதான் ஓபிஎஸ் முகமூடி தேவை. எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் சேர விரும்பவில்லை.
தனித்து செயல்படவே விரும்புகிறோம் என்றார். செம்மலை பேச்சில் இருந்து இரு அணிகளும் இணை தற்போதைய சூழலில் வாய்ப்பு இல்லை என்பதே தெரிய வருகிறது.