மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சோனியா காந்தி!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சோனியா காந்தியை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆஸ்பத்திரியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் சோனியா காந்தியை உடன் இருந்து கவனித்து வருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து நேற்று இரவு அவரை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர். கடந்த ஆண்டு இதே மருத்துவமனையில் தோள்பட்டை கோளாறை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.