வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. வடகொரியாவின் இத்தகைய செயல்பாடு உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே போர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தாக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய செயலால் கடும் எரிச்சல் அடைந்த அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரிய அதிபர் கிம் ஜங்-யங்கை கொல்ல சதிதிட்டம் தீட்டி வருவதாக புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் தென் கொரிய அதிபர் மாளிகையை முற்றிலும் அழிப்பது போன்ற போட்டோ வெளியாகி உள்ளது. இதை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அந்த போட்டோ செயற்கை கோளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வடகொரியாவின் சதி ஆக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு வடகொரிய ராணுவ வீரர்கள் அதிரடி பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தென் கொரியாவின் புளுஹவுஸ் பகுதியை தாக்குவது போன்ற போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.