கிம் ஜாங்-ஐ கொல்ல சதித்திட்டம்: வட கொரியா வைத்த செக்

அமெரிக்காவை சேர்ந்த பயங்கரவாதிகள் கிம் ஜாங்கை கொல்ல வாய்ப்புள்ளதால் அவர்களை தங்களிடம் அமெரிக்கா ஒப்படைக்க வேண்டும் என வடகொரியா கூறியுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சாம்பலாக்கி விடுவோம் என வட கொரியா சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்தது.

இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்கா தனது போர் கப்பல்களை வட கொரியாவுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-ஐ கொல்ல அமெரிக்காவின் பயங்கவாத அணியினர் அவர் மீது ரசாயன தாக்குதல் நடத்தக்கூடும் என அந்நாடு நினைக்கிறது.

இதையடுத்து, அமெரிக்கா அந்த பயங்கரவாத அணியினரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வட கொரியா வலியுறுத்தியுள்ளது.

இதை செய்யாத பட்சத்தில் வடகொரியாவின் சிறையில் இருக்கும் அமெரிக்கர்கள் கொடூரமாக தண்டிக்கப்படுவார்கள் என வட கொரியா எச்சரித்துள்ளது.

மேலும், வட கொரிய அரசுக்கு எதிராக செயல்படும் அமெரிக்கர்களை கடுமையாக தண்டிப்பது எங்கள் உரிமை என அந்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதை மறுத்துள்ள அமெரிக்கா, கிம் ஜாங்-ஐ யாரும் கொல்ல முயற்சிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த மூன்றுக்கும் மேற்பட்ட பிரபல மனிதர்களை வட கொரியா கைது செய்து சிறையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.