ரொறொன்ரோ–அடுத்த 10 வருடங்களிற்கு குறைந்த ஹைட்ரோ கட்டணத்தை ஒன்ராறியோ மக்கள் காண்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பின்னர் இந்த குறைப்பிற்கான விலையை தொடரும் 20வருடங்கள் செலுத்துவரென தெரிவிக்கும் புதிய சட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த பத்தாண்டுகளில் மின்சார கட்டணங்கள் மாகாணத்தில் கிட்டத்தட்ட இரட்டிப்பு மடங்காக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஒன்ராறியோ மக்கள் இடையே கோபம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார கட்டணத்தை குறைக்கும் திட்டம் குறித்த தகவல் அறிவித்த 10 வாரங்களிற்கு பின்னர் லிபரல் அரசாங்கம் பாவனை-நேர-கட்டணம் குறைத்தல், குறைந்த வருவாய்க்கான செலவு மற்றும் கிராமபுற ஆதரவு திட்டங்கள் மற்றும் புதிய சமூக திட்டங்களை அறிமுகப்படுத்தல் போன்ற அதன் சட்டங்களை அறிவித்துள்ளது.