ஏடிஎம் ரசீதுக்கும், ஆண்மை பிரச்சனைக்கும் தொடர்பு: அதிர்ச்சி தகவல்

அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், முறையற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் போன்றவையே ஆண்மை பிரச்சனைக்கு பொதுவான காரணமாக முன்வைக்கப்பட்டாலும், ஏடிஎம் ரசீதுக்கும் ஆண்மை பிரச்சனைக்கும் தொடர்பு என்ற தகவல் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

ஏடிஎம் ரசீதுகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை ஆகிய இரண்டுமே ஆண்மைக்குறைவு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதே போல, லாட்டரி டிக்கெட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் வழங்கப்படும் ரசீதுகளும் இந்த பிரச்சனை ஏற்படுத்துமாம்.

இதற்கு முக்கிய காரணம் ஏடிஎம் ரசீதில் பிஸ்பினால்-ஏ என்ற ரசாயனம் அதிகளவில் காணப்படுவதுதான்.

இது ஆண்களின் உடலில் ஆஸ்டிரோஜென் எனும் ஹார்மோனை, அதிகளவில் சுரக்கவைப்பதால், விறைப்பு பிரச்சனை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஏடிஎம் ரசீதை கையாளும்போது இனி கவனமாக இருக்க வேண்டும், முடிந்தால் கையுறை அணிந்து கொள்ளுங்கள்.