சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து! வாழைப்பூவின் மகத்துவம்

வாழைப்பூவை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வயிற்று கடுப்பு நீங்க, வெள்ளைப்படுதல், கை கால் எரிச்சல், மலட்டு தன்மை நீங்க, இரத்த மூலம், உடல் சூடு, இருமல் என பல நோய்களுக்கு மருந்தாகிறது.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பூ சிறந்தவொரு மருந்தாகும்.

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள், சர்க்கரை நோய்க்கு மூலக்காரணம் நம் உணவு முறையே ஆகும்.

இரசாயனம் கலந்த உணவுகள், போதிய உடற்பயிற்சியின்மை, அதிக வேளைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்ற காரணங்களினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் வாழைப்பூவுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கச் செய்யும், இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.