பிலியந்தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் சேவையாற்றிய ஜே.ஏ.டீ. சமிந்த அபேவிக்ரம பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.
மாரவில வீரஹேன வாசனா மாவத்தையில் இன்று (13) பிற்பகல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது.
அபேவிக்ரமவின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி பூதவுடலுக்கு இறுதி மரியாதை செய்த பின்னர் அவருக்கு பதிவியுயர்வு வழங்கி, பூதவுடலுக்கு உத்தியோகபூர்வ இலச்சினையை அணிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.