அதிகாரத்தில் இல்லாத ஒரு தலைவனுக்குப் பின்னால் உள்ள பலம் எது? கருணா விளக்கம்

அதிகாரத்தில் இல்லாத ஒரு தலைவனுக்குப் பின்னால் உள்ள பலம் எது என்பதை, கடந்த மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தெளிவுபடுத்தியுள்ளார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற கலாசார விளையாட்டு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு உரையாற்றிய கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்,

அதிகாரத்தில் இல்லாத ஒரு தலைவனுக்குப் பின்னால் உள்ள பலம் எது என்பதை, கடந்த மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தெளிவுபடுத்தியுள்ளார். எனவே இந்த வருட இறுதிக்குள், நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் உறுதியாகிவிட்டது. இதனை மே தினக் கூட்டம் உறுதி செய்திருக்கிறது.

இதேவேளை, “கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்திருந்தாலும், 7 ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸிடம், ஆட்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்ப் பிரதேசங்கள், அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.