மகாநாயக்கர்களை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்த மோடி!!

இந்தியாவுக்கு வருமாறு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பை மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

கண்டியில் வைத்து மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களை இந்திய பிரதமர் சந்தித்த போது இந்திய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர், கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.