இந்திய பிரதமரின் வருகையால் இலங்கை மக்களுக்கு நன்மை! சஜித் பிரேமதாஸ

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை காரணமாக, நாட்டு மக்களுக்கு பாரிய நன்மைகள் கிடைத்துள்ளதாக வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடக செவ்வி ஒன்றின் போது இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய பிரதமர் தமது விஜயத்தின் போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கான வீடமைப்புக்களுக்கான உதவிகளை அறிவித்தார்.

எனினும் மக்களுக்கான இந்த நன்மைகளை பொருட்படுத்தாது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கறுப்பு கொடிகளை ஏந்தப்போவதாக எச்சரித்திருந்தமையை அவர் கண்டித்துள்ளார்.