எதற்கும் ஏமாறாத தமிழ் மக்கள்.. இதில் மட்டும் தொடர்ந்து ஏமாறுகிறார்களே? ரஜினி வேதனை

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

அதன்பின் அவர் கூறுகையில், படம் வெளியிடப்படும் போது மட்டும் ரஜினி ஸ்டன்ட் செய்வார். படம் ஓடுவதற்கு ஏதாவது யுக்திகளை கையாளுவார் என்று பலர் கூறுகின்றனர்.

உங்கள் அன்பால் நான் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய ரசிகர்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் இதற்கெல்லாம் ஏமாறமாட்டார்கள்.

அது என்னவோ தெரியவில்லை ஏமாறுவதில் ஒன்றில் தான் ஏமாறுகிறார்கள், அதை நான் தற்போது கூற விரும்பவில்லை.

அரிசி வெந்தால்தான் சோறு ஆகும். படம் நல்லா இருந்தால்தான் வெற்றி பெறும். நீங்கள் என்னதான் தலைகீழாக குட்டிக்கரணம் அடித்தால் கூட ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.