முன்னாள் ஜனாதிபதி மகிந்தவையும், கோட்டாபய ராஜபக்சவையும் பாதுகாத்துக் கொண்டிருப்பது இந்த அரசுதான் என்று அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் இது தொடர்பாக கூறியுள்ளார்.
கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததும் அவரைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்புகொண்டு ‘நாங்கள் வென்றுவிட்டோம்.
நீங்கள் உடனடியாக ஆட்சியை எம்மிடம் ஒப்படைத்துவிட்டு அலரிமாளிகையை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு நாங்கள் பூரண பாதுகாப்புத் தருகின்றோம் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மஹிந்தவும் வெளியேறினார். அன்று முதல் இந்த அரசு மஹிந்தவையும் கோட்டாபயவையும் பாதுகாத்து வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுடனான போரை வென்றெடுப்பதற்கு அவர்கள் இருவரும் பங்களிப்பு வழங்கியமையே இதற்குக் காரணம்.
இதற்காக அவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டிந்தால் அவர்களுக்குச் சட்டம் தண்டனை வழங்கும். இதில் இருந்து அரசு யாரையும் பாதுகாக்காது.
ஆனால், ஜனாதிபதியோ, பிரதமரோ தண்டனையை வழங்கமாட்டார்கள். அதை பொலிசும், நீதிமன்றமும் பார்த்துக்கொள்ளும் எனவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.