பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கோடி ரூபாவுக்கு விற்பனை!!

நல்லாட்சி அரசாங்கத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை கூடிய விலைக்கு விற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததுள்ளார்.

சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்களுக்குத் தீர்வை அறவிடப்பட்டிருந்தால் திறைசேரிக்கு சுமார் மூன்று கோடியே 30 இலட்ச ரூபா கிடைத்திருக்கும் எனவும், மக்கள் சேவைக்கென தீர்வையற்ற

ரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை கூடிய விலைக்கு விற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் தேடிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்மோடு வைத்துக்கொள்ள அரசு இலஞ்சமாக அவர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கியிருப்பது நாடறிந்த உண்மை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்தபோதிலும் அவர்களது அதிருப்தியை

சம்பாதித்துக்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் கண்களை மூடிக்கொண்டு இருப்பதாகவும் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.