வட மாகாணத்தில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக 120 வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர்த்தகர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபி நகரின் வர்த்தகரான மஹமுத்டே ஹலி அப்துல்லா அல்கஜே என்ற பிரதான வர்த்தபர் ஒருவர் இதற்காக முன்வந்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக மூவர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து மன்னார் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை, அந்த குழுவினர் சந்தித்த பின்னர் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.
இன, பேதம் இன்றி வீடுகள் நிர்மாணிப்பது தொடர்பில் அபுதாபி வர்த்தகருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் ரிஷாட் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டு திட்டத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குடிநீர் விநியோக திட்டம் ஒன்றை செயற்படுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.