ரஜினி அரசியலுக்கு வந்தால் இத்தனை லட்சம் வாக்குகள் பெறுவார்: மயில்சாமி ஆருடம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், தனது முதல் தேர்தலில் 60 லட்சம் வாக்குகள் பெறுவார் என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ள அவர், அந்நிகழ்ச்சியில் பேசியது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

அரசியலில் ஈடுபட ஆண்டவன் தீர்மானித்தால் அது நடைபெறும் என்று அவர் கூறியது அவரது அரசியல் பிரவேசம் குறித்த சூசகமான அறிவிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது இந்த பேச்சு குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் மயில்சாமி, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வந்தால் விஜயகாந்த் முதல் தேர்தலில் பெற்ற 24 லட்சம் வாக்குகளை விட அதிகமாக, 60 லட்சம் வாக்குகள் பெறுவார் என்று தெரிவித்தார்.