யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் திறனைக் கண்டு இலங்கை இராணுவம் வியந்துள்ளது.
விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அதி விரைவுத் தாக்குதல் படகுகளை முள்ளியவாய்கால் பகுதியில் உள்ள இடம் ஒன்றில் வைத்து, தென்னிலங்கையில் இருந்து வருபவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இது குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.
அத்துடன், விடுதலைப்புலிகளின் கடற்படையின் பொறியியல் திறன்களாக இதனை அடையாளம் காட்டப்படுகின்றது.
மேலும், அங்கு விடுதலைப்புலிகளின் கடற்கலங்கள், நீர் மூழ்கிக் கப்பல்களின் பாகங்கள், விடுதலைப்புலிகளின் கடற்கலங்களை பரீட்சித்து பார்க்கும் செயற்கை நீர் தடாகம் என்பன காணப்படுகின்றதாகவும் இதனை பலரும் பார்த்து வியந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.