கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஊழியர்களை தெரிவு செய்வதில் மோசடி

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஊழியர்களை இணைத்துக் கொள்வதில் முறைகேடுகள் இடம்பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிவில் விமான சேவை மற்றும் விமான நிலைய நிறுவனத்தினால் ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்காக நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்ட போதும், வெளியிலிருந்து ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக விமான நிலைய ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கத்துடன் தொடர்புடைய தொழிற்சங்க தலைவர் ஒருவரின் மகன் இந்த நேர்முக தேர்வில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

எனினும் அவரை விடவும் அதிக புள்ளிகளை பெற்றவர்கள் வேலைக்கு இணைத்துக் கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேர்முக தேர்விற்காக 35 பேர் சென்றுள்ள நிலையில் உரிய புள்ளிகள் காணப்பட்ட போதிலும் 10 பேர் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.