சத்து நிறைந்த கார்ன் – குடமிளகாய் சாலட்

தேவையான பொருட்கள் :

சோளம் – 1,
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு,
வெங்காயம் – 1
தக்காளி – 1,
சின்ன குடமிளகாய் –  1,
பச்சை மிளகாய் – 1,
கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு – சிறிதளவு.

செய்முறை :

* சோளத்தை வேகவைத்து நன்றாக உதிர்த்துக்கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, குடமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் உதிர்த்த சோளத்துடன் வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகுத்தூள், குடமிளகாய், ப. மிளகாய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சத்து நிறைந்த கார்ன் – குடமிளகாய் சாலட் ரெடி.