விடுதலைப் புலிகளுடான யுத்த வெற்றியின் எட்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட வைபவங்கள் இன்று நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்றத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவுத்தூபியில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.
அத்துடன் குறித்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு வெளிநாடுகளின் தூதுவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வைபவத்துக்கு சமாந்தரமாக இஸ்ரேல், இத்தாலி, ஐக்கிய அரபு இராச்சியம், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் யுத்த வெற்றியின் ஒன்பதாம் வருடப் பூர்த்தியை முன்னிட்டு விசேட வைபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
இதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் இலங்கையர் அமைப்பு மேற்கொண்டுள்ளது.