அமைச்சரவை மாற்றத்தில் தொடரும் இழுபறி நிலை!

எந்தவொரு நேரத்திலும் அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மீன்பிடித்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் எனது இல்லத்தில் நடத்திய கூட்டம் அமைச்சரவை மாற்றம் பற்றியதல்ல.

எனினும் எந்தவொரு நேரத்திலும் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய முடியும்.

முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை.

எனது இல்லத்தில் நடைபெற்ற கூட்டம் மே தினத்தின் போது உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டும் நோக்கிலான ஓர் கூட்டமேயாகும்.

இந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். எனினும் அமைச்சரவை மாற்றம் பற்றி பேசப்படவில்லை என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.