-
மேஷம்
மேஷம்: உங்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங் களைத் தேடி வருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணம் தோன்றும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அடுக்கடுக் கான வேலைகளால் அவதிபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
-
சிம்மம்
சிம்மம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
கன்னி
கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அமோகமான நாள்.
-
துலாம்
துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவு களை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
-
தனுசு
தனுசு: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
-
மகரம்
மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். முகப்பொலிவுக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
-
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் மறைமுகப் பிரச்சனைகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
-
மீனம்
மீனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். சாலைகளை கடக்கும் போது நிதானம் அவசியம். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.