ரஜினி ஒரு ஊழல் நடிகர் என்றும், அரசியலுக்கு வரக்கூடாது என்றும், சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இன்று ரசிகர்கள் மத்தியில் போருக்கு ரெடியாக இருக்கும்படி அறைகூவல் விடுத்த நிலையில், டிவி சேனலுக்கு பேட்டியளித்த பாஜக எம்.பி சுப்பிரமணியன் சாமி, அரசியலுக்கு ரஜினி வரவே கூடாது என தெரிவித்துள்ளார்.
ரஜினி ஒரு ஊழல் நடிகர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினிக்கு அரசியல் பற்றிய அறிவு கிடையாது என்றும், முதல்வராக தகுதியில்லை என்றும் சு.சாமி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ரஜினி தமிழர் இல்லை என நான் ஒருபோதும் கூறியதில்லை என்றுள்ள சு.சாமி, மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ரஜினி என திமுகதான் பிரச்சினை கிளப்பியது என்று கூறியுள்ளார்.