சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி அளிக்கிறது: பிரதமர் மோடி கருத்து

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட் விதித்த மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இன்று தடை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இறுதி தீர்ப்பு வரும் வரை தூக்கிலிடக் கூடாது என்று 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
சர்வதேச தேசத்தின் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது திருப்தி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூயை தொடர்பு கொண்டு நன்றியை தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் இந்தியா சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேக்கு பாராட்டுக்களை கூறினார்.
இதனிடையே, குல்பூஷன் யாதவை காப்பாற்ற மத்திய அரசு வாய்ப்புள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.