ஐரோப்பிய நாடுகளின் உதவியே வேண்டாம்: உதறி தள்ளிய பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டெவின் போதை மருந்துக்கு எதிராக பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ரொட்ரிகோவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

குறிப்பாக ஐரோப்பிய யூனியன் பிலிப்பைன்ஸ் நாட்டின் நடவடிக்கைகளை கடுமையாக சாடி வருகிறது. ரொட்ரிகோவின் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டி வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வாய்ப்புள்ளதால் அவர்களின் உதவியே வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டெ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிபர் ரொட்ரிகோவின் செய்தி தொடர்பாளர் எர்னெஸ்டோ கூறுகையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பெறப்படும் நிதியை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்ற பரிந்துரைக்கு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு நிதி அளித்து வரும் 8-வது பெரிய நாடாகும். இதனால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தெரிந்தும் பிலிப்பைன்ஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.