தஞ்சாவூரில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவையாறு திருத்தலம். இங்கு புகழ்பெற்ற ஐயாறப்பர் ஆலயம் இருக்கிறது. ஐந்து ஆறுகள் சூழ அமைந்த தலம் என்பதால் ‘திருவையாறு’ என்றும், ஆலய இறைவன் ‘ஐயாறப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆலயத்தின் இரண்டாவது சுற்றுப் பிரகாரத்தில் விநாயகப் பெருமான், சிவலிங்க வடிவில் வீற்றிருக்கிறார். இவர் ‘கணேச லிங்கம்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இந்த கணேச லிங்கத்தின் அருகில் விநாயகரின் வாகனமான மூஷிக வாகனமே உள்ளது. இந்த அற்புதக் காட்சியை வேறு எந்த ஆலயங்களிலும் காண முடியாது.