அன்புமணி-திருமாவளவனுக்கு புகழாரம்: மு.க.ஸ்டாலின் நல்ல நிர்வாகி சீமான் போராளி என ரஜினி பாராட்டு

ரஜினியின் இன்றைய அரசியல் பேச்சுக்கள் அனைவரையும் கவரும் வகையிலேயே அமைந்திருந்தது. தமிழகத்தின் இன்றைய அரசியல் சரியில்லை என்பதை சுட்டிக்காட்டிய ரஜினி அரசியல் கெட்டுப் போய்விட்டதாக வர்ணித்துள்ளார்.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் தலைவர்களை பற்றி ரஜினி தனது பேச்சின் போது உயர்வாகவே குறிப்பிட்டார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகி அவருடன் பொறுப்பை ஒப்படைத்தால் நன்றாக செயல்படுவார் என்று சோ என்னிடம் ஒருமுறை கூறியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பற்றி குறிப்பிடும் போது அவர் சிறந்த போராளி. அவரது கருத்து மிக்க பேச்சுக்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன என தெரிவித்தார்.

இதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் ரஜினி பாராட்டினார்.

திருமாவளவனை பற்றி குறிப்பிடும் போது தலித்துக்காக பாடுபடுபவர் என்று கூறினார்.