சேவை செய்யாத அமைச்சர்களை பதவி நீக்கும் அரசியல் கலாசாரம் வேண்டும்: மஹிந்த

தமது சேவையை மக்களுக்கு முறையாக பெற்றுக்கொடுக்காத அமைச்சர்களை நீக்கி அதற்கு பதிலாக மற்றொருவரை நியமிக்கின்ற ஒரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை ஹூங்கமை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்களே தவிர, தமது குடும்பங்களை போசாக்குப்படுத்திக்கொள்வதற்காக அல்ல.

மக்களால் தேர்வுசெய்யப்பட்டவர்கள் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும்.

அவ்வாறு செயற்படாதவர்களை அந்த அமைச்சுக்களில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

தமது சேவையை முறையாக பெற்றுக்கொடுக்காத அமைச்சர்களை நீக்கி அதற்கு பதிலாக மற்றொருவரை நியமிக்கின்ற ஒரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.