யாழ்ப்பாணத்தில் ரணில் வழங்கிய உறுதிமொழி!

வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்துள்ளார்.

அதற்காக வடமாகாண சபையின் ஆதரவு மிகவும் முக்கியம் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போது பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வட மாகாணத்தில் பாரிய நிர்மாணிப்பு திட்டம் மேற்கொள்வதாக தான் குறிப்பிட்டதாக பிரதமர் இங்கு கூறியுள்ளார்.

இந்திய நெடுஞ்சாலை அமைச்சருடன் வடமாகாணத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படும் அதிவேக வீதி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீள்குடியேற்றத்திற்காக வட மாகாணத்தில் வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு பொருளாதார அபிவிருத்திகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் திறன் ஊடாக வடக்கில் அபிவிருத்தி வேகத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.