கிரிக்கெட் தகவலை உடனுக்குடன் வழங்கும் பிரத்யேக இணைய தளமான ஈ.எஸ்.பி.என். கிரிக்இன்ஃபோ இணைய தளம் வாசகர்களை வைத்து ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அது இதுவரை 10 ஐ.பி.எல். தொடர்களை கணக்கில் வைத்து அனைத்துகால சிறந்த ஐ.பி.எல். அணி எது என்பதுதான்.
இந்த கருத்து வாக்கெடுப்பு கடந்த 6 வாரங்களாக நடைபெற்றது. இதன்முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் உட்பட 17 பேர் கொண்ட குழு இந்த அணியை தேர்வு செய்துள்ளனர்.
அனைத்துகால சிறந்த ஐபிஎல் அணிக்கு டோனியைக் கேப்டனாகத் தேர்வு செய்துள்ளது. அணியில் 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ்-க்கு இடம் கொடுக்கவில்லை.
அனைத்துகால சிறந்த ஐபிஎல் அணி:
டோனி (கேப்டன் அண்டு விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், விரேந்திர சேவாக், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, வெயின் பிராவோ, சுனில் நரைன், அஸ்வின், புவனேஷ் குமார், லஷித் மலிங்கா
6 பேட்ஸ்மேன், ஒரு ஆல்ரவுண்டர், 4 பந்து வீச்சாளர்கள் என்ற முறையில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டி. வில்லியர்ஸ் 12-வது வீரர் என்று இந்தக் குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளது.
மொத்தம் இந்த அணிக்காக 31 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர், இதில் 14 அயல்நாட்டு வீரர்கள் அடங்குவர். இந்த 14 அயல்நாட்டு வீரர்களில் 4 பேரை குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.
பல்வேறு காரணங்களினால் இந்த அணியை தோனிதான் வழி நடத்த வேண்டும் என்று பெரிய அளவில் ஆதரவு இருந்தது என்றும் 9 சீசன்களில் வெற்றிகரமான கேப்டனாக தோனி திகழ்ந்திருக்கிறார் என்பதன் அடிப்படையில் முடிவு செய்தன.