ஐ.பி.எல். தொடர் சீசன் 10 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ஐதராபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக மும்பை இந்தியன்ஸ் – ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
இந்த தொடரில் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனே அணிதான் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் தொடரை தோல்வியுடன் தொடங்கினோம். எங்களுடைய தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியை பெற நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்ததே புனே அணிதான்.
அந்த அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, எப்படி தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்று ஆராய்ந்தோம். அதன்பிறகு தொடர்ந்து முன்னேறினோம். சில போட்டிகளில் நெருங்கி வந்து வெற்றி பெற்றோம். மீண்டும் தொடரின் மத்தியில் புனே அணிதான் நாங்கள் விழிப்பதற்கான அழைப்பு விடுத்தது.
தற்போது நாக்அவுட் சுற்றிலும் புனே அணியிடம் தோல்வியடைந்தோம். அதுவும் எங்களுக்கு விழித்துக் கொள்ள கொடுத்த அழைப்புதான். பெங்களூருவில் கொல்கத்தா அணிக்கெதிராக நாங்கள் வெற்றி பெற அது முக்கிய காரணமாக இருந்தது. இன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.