தேவையான பொருட்கள் :
சாமை அரிசி – ஒரு கப்,
கறிவேப்பிலைப் பொடி, உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப,
கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
நிலக்கடலை – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு.
கறிவேப்பிலைப் பொடி செய்வதற்கு:
கறிவேப்பிலை – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 3,
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவைக்கு ஏற்ப.
செய்முறை:
* பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து ஆறவிட்டு, பொடி செய்துகொள்ளவும்.
* சாமை அரிசியை நன்றாக கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் உதிரியாக வடித்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் போட்டு தாளித்த பின்னர் இதனுடன் கறிவேப்பிலைப் பொடி, வடித்த சாதம் இரண்டையும் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
* குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்து, மெதுவாகக் கிளறி, நன்கு கலந்துவந்ததும் இறக்கி, அப்பளம் அல்லது துவையலுடன் பரிமாறவும்.
* சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம் ரெடி.