உள்ளூராட்சி தேர்தல் பற்றி இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றில் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன, உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், இவ்வாரத்துக்குள் அடுத்தகட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.