தேசிய நல்லிணக்கத்துக்கு புலம்பெயர் இலங்கையரின் பங்களிப்பு!

தேசிய நல்லிணக்கத்துக்குப் புலம்பெயர் இலங்கையரின் பங்களிப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர் மத்தியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு வாழும் இலங்கையர்களை நாளை மாலை சந்திக்கவுள்ளார்.

கான்பெராவிலுள்ள இலங்கைத் தூதரக கட்டிடத்தில் நடைபெறும் குறித்த சந்திப்பின் போது புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர், நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகள், இனங்களுக்கிடையிலான ஐக்கியம் என்பவற்றைக் கட்டியெழுப்ப வழங்கமுடியுமான பங்களிப்புகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடலும், ஜனாதிபதியின் விசேட உரையும் நிகழ்த்தப்படவுள்ளது.

அத்துடன் ஆஸ்திரேலியாவின் விவசாயத்துறை நவீன தொழில்நுட்பங்களை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது முக்கிய கவனம் செலுத்தவுள்ளார்.