புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, வெளிவிவகார சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் நோக்கில் வெளிநாடுகளில் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், பிரதி தூதுவர்கள், கொன்சோல் அதிகாரிகள உள்ளிட்ட இராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
மேலும் தூதரகங்களில் பணியாற்றி வரும் சிற்றூழியர்கள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
துரித கதியில் இந்த அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த அறிக்கையை கோரியுள்ளார் என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.