தீவுக்குள் ஏற்பட்ட அதிசயம்! யாழில் கிடைக்கும் புதுமை

யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள Hammenhiel கோட்டை நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை மற்றும் கரைத்தீவு ஆகிய தீவுகளுக்கு இடையிலுள்ள சிறிய தீவு ஒன்றில் Hammenhiel என்ற கோட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

17ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் போர்த்துகீசரினால் சுண்ணாம்பு பயன்படுத்தி கோட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், 1680ஆம் ஆண்டு டச்சுவினரால் அது கைப்பற்றப்பட்டுள்ளது.

எண்கோண வடிவில் காணப்படும் இந்த கோட்டையில் பல வருடங்களுக்கு முன்னர் ரோஹன விஜேவீர சிறை வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்த கோட்டை கடற்படையினரால் நவீன விடுமுறை விடுதியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடுமுறை விடுதிக்கு சென்று சிறை கைதியின் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.