ஊர்காவற்துறை நெரிஞ்முனை பகுதியில் பொலிஸார் இன்று திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுற்றிவளைப்பின் போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பதற்றநிலை உருவாகியிருந்தது.
இந்நிலையில், குறித்த பகுதியில் வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில், ஊர்காவல்துறை நெரிஞ்முனை பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலையை அடுத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.