தென்னிந்திய இசையமைப்பாளர் ஒருவர் ஆச்சரியப்படும் படி அதிரடி கிரிக்கெட் ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்தாண்டு டி.என்.பி.எல் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கான அதிகாரப்பூர்வ பாடலை இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். இந்த பாடலை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் மதுரையில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் தமனுக்கு தான் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை சேவாக் பரிசாக அளித்துள்ளார். சேவாக்கின் பரிசுக்கு மகிழ்ச்சியும், நன்றியும் தமன் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பேட்டின் புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தமன், தற்போது தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.