என்.பெரியசாமி மரணம் மாபெரும் இழப்பு: மு.க.ஸ்டாலின்

மரணமடைந்த என்.பெரியசாமி உடலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் பொன்முடி, தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி, ஆவடி நாசர், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, சுதர்சனம், பூங்கோதை ஆகியோர் உடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும், மூத்த மாவட்ட செயலாளராகவும் விளங்கியவர் என்.பெரியசாமி. அவரது மறைவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தி.மு.க.வுக்கும் மாபெரும் இழப்பு ஆகும்.

நகரமன்ற தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும், 30 ஆண்டு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தவர். அவரை தலைவர் கலைஞர் முரட்டுபக்தர் என்று பெருமையுடன் அழைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.