இலங்கையில் 91 பேர் பலி!110 பேர் மாயம்: தாய்நாட்டுக்காக கிரிக்கெட் வீரரின் உருக்கமான வேண்டுகோள்

இலங்கை அணி, இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. அங்கு இலங்கை அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சண்டிமால் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்றைய போட்டி முடிந்த பின்பு தான் ஒரு கெட்ட செய்தி கேள்வி பட்டேன்,

இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன், தனது தாய்நாடான இலங்கைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று டுவிட்டரில் மிக உருக்கமாக பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் 91 பேர் உயிரிழந்துள்ளனர்,110 பேர் மாயமாகியுள்ளனர் மற்றும் 5 இலட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.