இன்றைய ராசி பலன்கள் 27.05.2017

  • மேஷம்

    மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: காலை 10.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் யோசித்து முடிவெடுங்கள். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: காலை 10.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அதிருப்தி அடைவார்கள்.  வேலைச்சுமை மிகுந்த நாள்.

  • கடகம்

    கடகம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். போராடி வெல்லும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.

  • கன்னி

    கன்னி: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக் கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரி யாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

  • துலாம்

    துலாம்: காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப் பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அரைக் குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்:  காலை 10.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங் களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். அடுத்த வர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதா யமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர் கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோ கத்தில் உங்களின் புது முயற்சிகளை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • மகரம்

    மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: பிரியமானவர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நன்மை கிட்டும் நாள்.