ரஜினி அரசியலுக்கு வந்தால்..இந்த கட்சிக்குத் தான் அழைப்பேன்: பிரபல நடிகை ஓபன் டாக்

பிரபல திரைப்பட நடிகையும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளருமான நக்மா ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்போம் என்று கூறியுள்ளார்.

ரஜினி பேசிய அரசியல் பிரவேசம் கருத்து, தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.அரசியலுக்கு வந்தால் அவர் தனிக்கட்சித் தொடங்குவாரா அல்லது தேசிய கட்சிகளில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து திரைப்பட நடிகையும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளருமான நக்மா, தமிழகத்தில் டாஸ்மாக் போராட்டம் , நீட் தேர்வு பிரச்சனை, விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் தற்போது உள்ள அதிமுக அரசு உட்கட்சி விவகாரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட உரிமை என்றும் அரசியலுக்கு வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்போம் என்றும் இதுதொடர்பாக நிச்சயமாக அவரை நேரில் சந்தித்து பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.