வியாழன் கிரகம் பற்றி முழுமையாக ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் ‘ஜூனோ’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் வியாழன் கிரகம் மீது பறந்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
அதன் மூலம் அங்கு மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான சூறாவளி காற்று வீசுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கிரகத்தின் வடக்கு முனையில் இருந்து தெற்கு முனைவரை 1400 கி.மீட்டர் தூரத்துக்கு சூறாவளிக்காற்று சுழன்று வீசுகிறது.
அதே போன்று அங்கு அமோனியா ஆறு ஓடுவதும் தெரியவந்துள்ளது. அது பல 100 மைல்கள் ஓடுகிறது. வளிமண்டலத்தில் பல விதமான கியாஸ் கலந்து இருக்கின்றன.
மொத்தத்தில் வியாழன் கிரகத்தில் காற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பூமியை விட 11 மடங்கு அதிகமாக மேகங்கள் உள்ளன. ‘ஜூனோ’ விண்கலம் வியாழன் கிரகத்தில் 4200 கி.மீட்டர் தூரம் சுற்றி நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளன.