இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றத்தினால் இலங்iகியல் ஏற்பட்டுள்ள அழிவுகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் 122 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 97 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேலும், சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகவும், பாதிக்கப்பட்டோருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஜனாதிபதி புட்டின் உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.